எழுதவே எல்லோருக்கும் விருப்பம்,
தங்களை பற்றிய நினைவே என்றும்,
பிறர் வாழ்வில் நல்லதொரு திருப்பம்,
கொண்டு வர எண்ணவில்லை இன்றும்?
விந்தை உலகம் இந்த புது உலகம்,
எல்லோருக்கும் நலம் இங்கில்லை,
எங்கு பார்த்தாலும் பெரும் கலகம்,
எண்ணத்தில் இல்லை முல்லை?
எழுதுவதை பிறர் படிக்க எண்ணம் கொண்டு,
பிறர் எழுதுவதை படிக்க இல்லை மக்கள்,
மனதில் சிரிப்பு வருகிறது இதைக் கண்டு,
படிப்பதற்கு தானே உள்ளன சொற்கள்?
முளைக்காத நெல்லை நிறைய விதைத்து,
நீர் பாய்ச்சுவதால் என்ன கண்டனர் லாபம்,
பிறர் எழுதுவதை அறிவு பெற படித்து,
ஏற்றலாமே மனதில் உயர் எண்ண தீபம்!
சிந்தியுங்கள் கவிஞர்களே சிறிது நேரம்,
பாலைவனத்தில் எழுத்து எழுதப்பட்டால்,
அதை பார்க்க அவகாசம் எவ்வாறு நேரும்,
படியுங்கள் எங்கும் கவிதை தென்பட்டால்!
M V Venkataraman