எதிர்மறை வாழ்கை

Menaga

​நன்மையில் இருக்கும் தீமை

நண்பனில் ஒளிந்திருக்கும் பகைவன் 

அன்பில் இருக்கும் வெறுப்பு 

எளிமையில் வரும் கடினம்

முட்டாளாக நடிக்கும் அறிவாளி

கருமையில் பூத்த வெண்மை

பயத்தில் பிறக்கும் தைரியம் 

சேமிப்பில் செலவாகும் வரவு 

துன்பத்திலும் இருக்கும் மகிழ்ச்சி 

பதிலுக்குப் புதிர் போடும் கேள்விகள் 

அசுரனில் இருக்கும் தேவன்

தோல்வியில் கிடைத்த வெற்றி

இயற்கையில் பிறந்த செயற்கை

காவலாளி வேடத்தில் திருடன் 

காலையில் மறையும் இரவு

மறக்க மறுக்கும் நினைவுகள் 

இளமையில் முதுமையின் அறிவு

இருளில் பகல் ஒளி 

சூடான குளிர்

சரியில் மறைந்த தவறு 

ஆரம்பத்தில் பிறந்த முடிவு

இறப்பில் முடியும் பிறப்பு

தலைகீழ் குழப்பங்கள் தொடரும்..!

  • Author: Menaga (Pseudonym) (Offline Offline)
  • Published: December 31st, 2022 10:30
  • Comment from author about the poem: Hi guys . Happy new year. Stay healthy and happy.❤️
  • Category: Reflection
  • Views: 7


To be able to comment and rate this poem, you must be registered. Register here or if you are already registered, login here.